அதெல்லாம் எனக்கு தெரியும். நேரா மேட்டருக்கு வா என்று சிலர் அவசரப்படுவது நியாயமே.
அது போன்றவர்களுக்கு நேரிடையாக சில விடயங்கள் சொல்கிறேன். பிறகு முன் பதிவின் இறுதியிலிருந்து தொடர்கிறேன்.
பாதுகாப்பாக பங்கு வர்த்தகம் பயிலும் வழி முறைகள்:
- முதலில் http://moneybhai.moneycontrol.com எனும் தளத்தில் இலவசமாக ஒரு கணக்கை துவக்கவும்.
Courtesy: http://www.moneycontrol.com
- இத்தளத்தில் பங்கு வணிக விளையாட்டு என்று ஒன்று உண்டு. உங்களுக்கு முதலில் ஒரு கோடி ரூபாய் தருகிறார்கள். ஹா ஹா மெய்யான பணம் இல்லை. இது இ-பணம்.
- நீங்கள் நிஜமான சந்தைகளில் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.
- ஒவ்வொரு நாளும் நீங்கள் வாங்கிய பங்குகளின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியை அறியலாம்.
- இதனால் நீங்கள் சரியான பங்குகளை வாங்குகிறீர்களா என்பதையும் உங்கள் முடிவுகள் சரியானதாக இருக்கிறதா என்பதையும் குறித்துக் கொள்ளலாம்.
- உங்கள் கடினமான உழைப்பில் சம்பாதித்த பணத்தை போட்டு பங்கு வர்த்தகம் பயில்வதை விட சில மாதங்கள் இந்த தளத்தில் விளையாடி பயிலவும்.
மேலும் பேசுவோம்….
Super....
ReplyDeletesuper sir
ReplyDelete