Saturday, August 9, 2014

எங்கு முதலீடு செய்யலாம்

 

முன்பு பேசியதிலிருந்து தொடர்ந்து பேசுவோம்.

நிலம், வீடு, தங்கம், வெள்ளி, வங்கி சேமிப்பு என்று பார்த்தோம்.

நிலம் வாங்குவதின் நிலை பற்றி பேசினோம்.

அதுபோல

வீடு

வாங்கும் வீட்டில் நாமே குடியிருந்தால் வாடகை மிச்சமாகும்

வங்கி கடன் மூலம் வீடு வாங்கியிருந்தால் தவணை மற்றும் மிச்சமாகும் வாடகை இரண்டையும் கூட்டி கழித்து பார்க்க வேண்டும்

நாம் ஒரு வீட்டில் இருந்துக் கொண்டு இன்னொரு வீட்டை முதலீடாக நினைத்து வாங்கினால் அதன் வாடகை விகிதம் என்ன செலவுகள் என்ன என்று கணக்கு பார்க்க வேண்டும். எடுத்துக் காட்டாக 20 லட்சம் ரூபாயில் வீடு வாங்கி மாதம் 10,000 ரூபாய் விகிதம் 1,20,000 வருமானம் வந்ததென்றால் இதில் ஆகும் செலவுகள்

  • வீடு பராமரிப்பு செலவு
  • சொத்து வரி
  • வருமான வரி

இந்த 20 லட்சம் Fixed Depositல் போட்டிருந்தால் சுமார் 1,80,000 கிடைத்திருக்கும். வருமான வரி தவிர்த்து வேறு வரி இல்லை.

இந்த வீடு பன்மாடி குடியிருப்பாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதன் விற்ப்பனை விலை ஏறும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. தனி வீடுாக இருந்தால் வாடகையும் கிடைக்கும் விற்கும் போது குறைந்த பட்சம் இரண்டு மடங்காக திரும்பி வரும். ஆனாலும் நாம் வாங்கிய இடத்தையும் பொருத்திக்கிறது. மனைக்குதான் மதிப்பு. நாம் கட்டிய வீட்டின் மதிப்பு அதிகம் இல்லை.

மேலும் ஊரை விட்டுத்தள்ளி வாங்கியிருந்தால் அடிக்கடி சென்று பராமரிப்புகள் செய்ய வேண்டும்.

மேலும் நினைத்த மட்டில் வீட்டை விற்க முடியாது. அவசரமாக பணம் வேண்டும் என்றால் விற்க முடியாது. வங்கியில் அடமானம் வைப்பதும் சுலபத்தில் நடப்பதில்லை. எதிர்பார்த்த பணமும் கிடைப்பதில்லை.

எனக்கு வருமானம் வேண்டாம். எதிர்கால சந்ததிக்காக ஒரு வீடு மனையுடன் வாங்கி வைக்கிறேன் என்று நினைத்தால் அதற்கு வீட்டை கட்டி பணம் முடிக்கத்தேவையில்லை. வெறும் மனை வாங்கியே விட்டிருக்கலாம்.

இவ்வாறாக பணம் முடிக்கப்பட்டுவிடுகிறதா அல்லது பணம் மேலும் பணம் பண்ணுகிறதா என்று பார்க்கவேண்டும். அதனூடே வரும் தொல்லைகளையும் பார்க்க வேண்டும்.

தங்கம்

நகையாக வாங்குவதில் வீட்டில் உள்ள பெண்டிருக்கு சுகம், பெருமை, மகிழ்ச்சி.

ஆனால் முதலீட்டாக வாங்குகிறேன் என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.

நகைகளாக வாங்கும் போது செய்கூலி சேதாரம் என்று 100க்கு 20 போய்விடுகிறது. மேலும் விற்கும்போது இன்னும் கொஞ்சம் போய்விடுகிறது.

1 கிராம், 5 கிராம், 10 கிராம் கட்டிகளா 24-கேரட் வாங்கி வைக்கலாம். ஆனால் பாதுகாப்பிற்கு கவலைப் பட வேண்டும். திடீரென்று விற்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.

இ-கோல்ட் அல்லது Gold ETFல் பணம் போடலாம். சுலபமானது. வேண்டும் போது விற்கலாம். பாதுகாப்பிற்கு பஞ்சமில்லை.

அதிலும் யோசிக்க வேண்டியது தங்க விலை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. அதில் போட்ட பணம் நமக்கு எத்தனை விகிதத்தில் லாபம் ஈட்டித் தருகிறது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

வெள்ளி

வெள்ளி பாத்திரங்கள், பூஜை பாத்திரங்கள் என்று வாங்குகிறோம். அது எந்த அளவில் பயன்படுகிறது என்பதை உணரவேண்டும். அது ஒரு முதலீட்டு சாதனமாக இன்னும் பிரபலமடையவில்லை.

Gold ETF  போல இன்னும் Silver ETF வரவில்லை.

Returns என்ன என்பதை யோசிக்க வேண்டும்.

வங்கி சேமிப்பு பற்றி அடுத்த பதிவில் பேசலாம்.

மேலும் பேசுவோம்….

No comments:

Post a Comment