Saturday, August 9, 2014

பங்கு வர்த்தகத்தில் செல்வந்தராகலாமா

 

என்னடா இது பங்கு வர்த்தகம் பயில வந்த இடத்தில் என் வீட்டுக் கணக்கை கேட்கிறானே என்று எண்ண வேண்டாம்.

பெரும்பாலும் நான் பேசியவர்களிடம் அறிந்தது என்னவென்றால் என்ன ஐயா வீட்டு செலவிற்கே வருமானம் போதவில்லை நீங்கள் பங்கு வர்த்தகம் பண்ணு சேமிப்பு பண்ணு முதலீடு பண்ணு அப்படியெல்லாம் பேசறீங்க என்று சொன்னவர்களே அதிகம்.

அதனால் தான் இந்த முன்னேற்பாடு.

நீங்கள் தினமும் செய்யும் செலவுகளை குறிப்பெடுத்து வந்தால் மாத முடிவில் எது அவசிய செலவு எது அநாவசிய செலவு என்பதை விரைவில் அறிந்து விடுவீர்கள். அதை தவிர்த்தாலே அந்த மீதம் உள்ள பணத்தை என்ன செய்யலாம் என்பதை அறிவீர்கள்.

நாம் முதலீட்டை பற்றி பேசினோம் அல்லவா.

நமக்கு கூடுதல் வருமானம் வரத்தானே நாம் முதலீட்டை பற்றி பேசினோம். அவ்வாறான கூடுதல் வருமானம் எப்போது வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

  • நான் ஓய்வு பெற்ற பிறகு அமைதியாக வாழ ஒரு வீடு வேண்டும்
  • நான் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர வருமானம் வேண்டும்
  • என் மகளுக்கு இன்னும் 20 வருடத்தில் திருமணம் செய்ய வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
  • என் மகனை நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
  • வாகனம் வாங்க வேண்டும். எத்தனை நாள் தான் பேருந்தில் செல்வது.

எத்தனை வேண்டும். எப்போது வேண்டும் என்பதை வைத்தே நமது சேமிப்பு முறைகளும் நிர்ணயமாகிறது.

நிலம்

  • குறுகிய கால முதலீட்டிற்கு உகந்தது அல்ல.
  • எத்தனை மடங்கு அந்த முதலீடு பெருகிறது என்பது நீங்கள் வாங்கிய இடத்தை பொறுத்தது.
  • நினைத்தவுடன் விற்க இயலாது
  • மாதாந்திர வருமானம் கிடைக்காது
  • நிலம் இருக்கும் இடத்தை பொறுத்து ஆக்கரமிப்பு பிரச்சனை, அரசியல் குறுக்கீடு, நிலம் அபகரிக்கும் முதலைகளிடம் சிக்குதல், வழக்கு என்று பிரச்சனைகள் இல்லாது இருக்க வேண்டும்
  • நிலம் வாங்க முதலீடு தேவை. பெருந்தொகை அல்லது வங்கிக் கடன். அதற்கு கட்ட வேண்டிய தவணைகள். அதற்கான வட்டி விகிதம். (EMIs and Interest Rates).

மேலும் பேசுவோம்….

No comments:

Post a Comment