Saturday, August 9, 2014

ICICI Direct, Sharekhan, India Infoline, HDFC Securities அறிமுகம்

நீங்கள் மெய்யான பணத்தில் முதலீடு செய்ய இன்னும் நேரம் வரவில்லை. அவ்வாறு வரும்போது நீங்கள் பங்கு வியாபாரம் செய்ய ஒரு கணக்கு துவக்க வேண்டும். இதனை Demat account என்கிறார்கள். சில கலைச்சொற்களை தமிழ்படுத்தாமல் விடுகிறேன். இவ்வாறு இருப்பதே நல்லது. ஏனென்றால் நீங்கள் இணையத்தில் மேலதிக விபரங்களை தேடும் போது தமிழ் கலைச் சொற்கள் உதவிக்கு வராது. அதனால் நீங்கள் concept ஐ மட்டும் தமிழில் நன்றாக அறிந்துக் கொள்ளுங்கள். ஆங்கில சொற்களுக்கு தமிழ் பொருள் புரிந்துக் கொள்ளுங்கள்.

எந்த தளங்களில் நீங்கள் Demat Account துவக்கலாம்:

image

ICICI Direct Website

இன்னும் பலர் உள்ளனர். ஆனால் மேற் சொன்ன தளங்கள் பிரபலமானவை. எந்த ஒரு இணையத்தளத்திலும் கணக்கை துவக்குவதற்கு முன் அவை SEBI (Securities and Exchange Board of India – http://www.sebi.gov.in) ஆல் அங்கீகரிக்கப்பட்டவையா என்பதை அறிய வேண்டும்.

இப்போதைக்கு பங்க வர்த்தகம் பற்றி பயிலும் போது http://www.moneycontrol.com தளத்தில் விளையாடி பயின்றால் போதும். அதன் பிறகு நீங்கள் தயார் என்றால் இந்த கணக்கை துவக்க மேற்படி நிறுவனங்களை அணுகி உங்கள் விபரங்கள், புகைப்படம், வங்கி விபரம், PAN அட்டை இவற்றை தந்தால் இந்த கணக்கை துவக்கி உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லையும் தருவார்கள்.

குறிப்ப – வருடாந்திர கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 1000 வரையில் இருக்கும். மேலும் நீங்கள் பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும் Brokerage எனும் தரகு கட்டணமும் வசூலிக்கப்படும். இது சுமார் 0.25% லிருந்து 0.75% வரையிலும் இருக்கலாம். நல்ல இணையத்தரகர்களில் குறைந்த தரகு வாங்கும் நிறுவனமாக பார்த்து கணக்கு துவக்குதல் நல்லது.

மேலும் நீங்கள் வாங்கும் போதோ விற்கும் போது பத்திரப்பதிவு, மற்றும் வருமானவரி போன்றவை உங்கள் வருமானத்திலிருந்து கழிக்கப்படும். அதனால் எந்த விலையில் வாங்கி எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை அறிவது அவசியம்.

 

மேலும் பேசுவோம்…..

1 comment: