Sunday, August 24, 2014

வாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம் - 3

transact2

முந்தைய பதிவில் கூறியிருந்ததைப் போல நீங்கள் Reliance நிறுவனத்தை தேர்ந்தெடுத்தீர்கள்.

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இ-பணம் இருக்கிறது.

இதை நல்லப்படியாக பன்மடங்காக ஆக்க வேண்டும்.

சரி. இப்போது இந்த வாங்கும் பகுதியில் ஒரு எண்ணை இடுங்கள். நீங்கள் இப்போது பங்கு சந்தை பயிலும் மாணவரல்லவா கணக்கு அதிகம் பார்த்து நேரம் கிடத்த வேண்டாம். 1, 10, 100 அல்லது 1000 என்ற அளவில் பங்குகளை வாங்குங்கள். கணக்கிற்கு சுலபமாக இருக்கும்.

Current Price அல்லது Limit Price தேர்ந்தெடுங்கள். இப்போதைக்கு சந்தை விலையான Current Price தேர்ந்தெடுங்கள். மொத்த முதலீட்டு தொகை அதுவாகவே கண்க்கிட்டுக்கொள்ளும். உங்கள் வாங்கும் கட்டளை எது வரையில் காலாவதியாகாமல் இருக்க வேண்டும் என்பதை தேரந்தெடுங்கள். GTD யில் விட்டு விடுங்கள்.

Stop loss பற்றி பிறகு பேசுவோம். முதலில் சிலவற்றை வாங்கி விற்று பயில்வோம்.

என்ன பங்குகளை வாங்க வேண்டும்…..

மேலும் பேசுவோம்…

1 comment:

  1. பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:

    1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

    2. எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம் பண்ணலாம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.

    3. எங்க இண்டிகேட்டர் நூறு சதவீதம் லாபம் தரும் என்பதும் ஆயிரம் சதவீதம் பொய். மார்கெட் பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய இண்டிகேட்டர் அல்ல. அதாவது ஒரு இண்டிகேட்டர் பை காட்டினாள் பை பக்கமோ,அல்லது ஒரு இண்டிகேட்டர் செல் காட்டுவதால் மார்கெட் செல் பக்கமோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு விஷயம் துல்லியமாக இருந்தால் அந்த விசயத்திற்கு அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் காபிரைட் வாங்கி இருக்கும். நூறு ரூபாய் போட்டால் தினம் நூறு ரூபாய் கிடைக்கும் என்றால், எல்லா நிறுவனங்களும் முதலீட்டு நிர்வாகிகளை (fund managers ) வீட்டுக்கு அனுப்பி இருக்கும். அந்த இண்டிகேட்டர் அல்லது சாப்ட்வேர் மட்டும் போதுமே. தயவு செய்து யாரும் கண்டுபிடிசுடாதீங்காப்பா, எங்களுக்கு வேலை போய்டும். ஹா,ஹா,ஹா.... ஒரு இண்டிகேட்டர் அல்லது எதுவும் லாபமும் தரும் நஷ்டமும் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

    4. தினமும் கட்டாயம் இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல. ஓவர் ஆல் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .

    5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள். காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை.

    6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.

    7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

    மேலும் அறிய:

    http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

    ReplyDelete