Saturday, August 9, 2014

பங்குச் சந்தை அறிமுகம்

 

Stock Exchange என்பது பங்குச் சந்தை. பங்குகளை வாங்க விற்க ஒரு இடம். அதாவது எந்த நிறவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படிருக்கிறதோ அந்த சந்தைகளில்.

யாருக்கு வேண்டும் பங்குச் சந்தை?

நீங்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளி. நீங்கள் தான் அதன் நிறுவனர் உரிமையாளர். ஆனால் உங்கள் சொந்த முதலீட்டில் அந்த நிறவனத்தை இன்னும் வளர்ச்சியடைய செய்ய முடியவில்லை. உங்களுக்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது. அப்போது ஒருவர் உங்கள் நிறவனத்தில் பணம் போட முன்வருகிறார். அவரை Partner என்கிறோம்.

மேலும் பணம் தேவைப்படும்போது உங்கள் இருவரின் சொத்துகளும் சேர்ந்தும் உங்கள் தேவைக்கு குறைவாக இருக்கும் போது, வங்கிக் சென்று கடன் வாங்குவீர்கள்.

அல்லது பொது மக்களிடம் சென்று பணம் வாங்குவீர்கள். என்னது பொது மக்களா, அவர்கள் ஏன் எனக்கு பணம் தரவேண்டும் என்று கேட்கலாம்.

இந்த முறையை Intial Public Offering (IPO) என்கிறோம். நீங்கள் முறையான அனுமதிகளை பெற்ற பின்பே IPO செய்யலாம். அதாவது பாருங்கள் மக்களே, நான் ஒரு நிறுவனம் துவங்கியுள்ளேன். சில ஆண்டகளாக நன்றாக நடத்தி வருகிறேன். ஆனாலும் ஒரு கோடி நிறுவனமாகவே என் நிறுவனம் உள்ளது. இதை நூறு கோடியாக ஆக்கும் திறன் எங்களிடம் உண்டு. ஆனால் அதற்கு பெருத்த முதலீடு தேவைப்படுகிறது. நீங்கள் எல்லாம் சேர்ந்த இதல் முதலீடு செய்தால் நீங்கள் இந்த நிறுவனத்தில் பங்குதாரர் ஆகலாம். வரும் லாபத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று சொல்வதே IPO.

ஒவ்வொரு பங்கின் விலை சுமார் 1, 10, அல்லது 100 என்று துவங்கலாம். சுமார் ஒரு லட்சம் பேர் உங்கள் பங்கை 10 ரூபாய்க்கு வாங்கியிருந்தால் அடுத்த ஆண்டில் உங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தால் 20 சதவீதம் லாபம் அடைந்திருந்தால் ஒவ்வொருவரின் பங்கும் 12 ரூபாயாக உயர்ந்து அவர்கள் இரண்டு ரூபாய் சம்பாதிக்க வழி வகுக்கிறீர்கள். ஒரு வேளை உங்கள் நிறுவனம் நட்டமடைந்தாலும் அந்த நட்டமும் பங்குதாரர்களுடன் பங்கு பிரிக்கப்பட்டுவிடுகிறது.

இதனை Primary Market அல்லது முதன்மை சந்தை என்கிறார்கள்.

ஆனால் இவ்வாறாக முதன்மை சந்தையிலிருந்து பங்குகளை வாங்கியவர்களுக்கு ஏதாவது காரணத்தினால் பங்கை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது இரண்டாம் சந்தைக்கு வருகிறது. இதனை Secondary Market என்கிறார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.

மேலும் பேசுவோம்…..

No comments:

Post a Comment