

Charts from Moneycontrol.com: http://www.moneycontrol.com/india/stockpricequote/auto23wheelers/tvsmotorcompany/TVS
ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன்பு சில அடிப்படை தகவல்களை நாம் அறிய வேண்டும். முதலில் ஒரு பங்கின் விலை. CMP என்றால் தற்போதைய விலை Current Market Price.
TVS Motoro Companyயின் 5-வருட Chart – விளக்கப்படம் இங்கு தரப்பட்டுள்ளது. August 2009ல் சுமார் ரூ 22 இருந்த ஒரு பங்கின் விலை நடப்பு ஆண்டில் August 2014ல் 173 ஆக வளர்ச்சி அடைந்து உள்ளது. அதாவது சுமார் 7 மடங்கு. இந்த வளர்ச்சி உங்களுக்கு வேறு எந்த முதலீட்டிலிருந்தும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா.
பொதுவாக 52-week LOW/HIGH என்று பார்க்கலாம். அதாவது ஒரு வருடத்தில் அந்த பங்கின் உச்சக் கட்ட விலையும் குறைந்த பட்ச விலையும்.
மேலும் வர்த்தகம் நடக்கும் நாளில் Open/Close அதாவது எந்த விலையில் துவங்கியது எந்த விலையில் முடிந்தது என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் பேசுவோம்…..
No comments:
Post a Comment