Saturday, August 9, 2014

பங்கு வர்த்தகம் ஏமாற்று வேலையா?

 

இருக்கலாம். இதை வெளியாளாக இருந்துக் கொண்டு சொல்வது மிகவும் கடினம்.

  • நாம் அறிந்த எத்தனையோ பெரிய நிறுவனங்கள் மூழ்கிப் போயிருக்கின்றன.
  • பல முறை கையாடல்கள் உள்குத்து பெரிய தலைகள் மாட்டிக் கொள்வது என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைப்பு செய்திகள் வருகிறது.
  • நமக்கு தெரிந்த நிறுவனங்களிலேயே கணக்கு புத்தகங்களை படித்த CA க்கள் மாற்றி அமைக்கிறார்கள். லாப நட்டங்களை திரித்துக் காட்டுகிறார்கள். இறந்துக் கொண்டிருக்கும் நிறவனங்களை கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களாக காட்டுகிறார்கள்.
  • சில பெரிய நிறுவனங்கள் Public Relations Officer – PRO அமர்த்தி இணையத்திலும் செய்தி தாட்களிலும் தொலைகாட்சிகளிலும் அவர்களின் பங்குகளை வாங்கினால் நல்ல விலையில் விற்று லாபம் பெறலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
  • பணக்காரர்கள் ஏற்படுத்திய இந்த உலகக்தில் நடுத்தர வர்க்கத்திற்கும் ஏழைகளுக்கு எங்கே இடம் என்றும் தோன்றுகிறது.
  • பங்கு வர்த்தகத்தில் லாபம் அடைந்தவர்கள் காண்பதே அரிதாக இருக்கிறது.
  • பெரிய நிறுவனங்கள் பல கோடி ரூபாயில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறைய Demand இருப்பதாக ஒரு போலி தோற்றத்தை உருவாக்குகிறார்கள். பிறகு பங்கின் விலை உயரத்துவங்கியதும் அவர்களே விற்று Supply லாபம் சம்பாதிக்கிறார்கள்.
  • தனி மனித கோடிஸ்வரர்களும் இவ்வாறாக நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் அடிப்பதும் நடக்கிறது.
  • பல இடைத்தரகர்கள் தற்கொலை செய்துக் கொண்டதையும் நாம் அறிந்திருக்கிறோம் செய்திகள் மூலமாக.

ஐயோ ஏமாற்று வேலையாக இருக்கலாமா? என்னங்க சொல்றீங்க அப்ப இந்த வலைப்பூவை படிப்பதே வேஸ்ட் என்று நீங்கள் நினைப்பது சகஜமே.

சில விளக்கங்கள்

சட்டங்கள் வரையறுக்கப்படுவது அதை சாமார்த்தியமான சிலர் மீறுவது நடந்துக் கொண்டிருக்கின்றன. அதனால் வாழ்கை சக்கரம் ஓய்வதில்லை.

விமானம் கடத்தப்படுகிறது என்று யாரும் விமானப் பிரயாணம் செய்யாமல் இருப்பதில்லை.

உணவில் கலப்படம் நடக்கிறது என்பதால் உணவகங்களுக்கு மக்கள் போகாமல் இல்லை.

உடலில் தங்கங்களை போதை மருந்தை பதுக்கி வைத்து சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிலிருந்து வந்து மாட்டிக் கொள்பவர்களின் கதைகளையும் கேட்கிறோம்.

இந்தியாவில் பெரிய ஊழல் வாதிகளையும் ஊழல் அரசாங்கங்களையும் மீறி இந்தியாவின் பொருளாதாரமும் வங்கித்துறையும் பங்கு வர்த்தகமும் அதற்கான சட்டதிட்டங்களும் மிகவும் கடினமாகவும் பொதுமக்களை பாதுகாப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது.

இந்தியாவின் Reserve Bank of India (RBI), Securities and Exchange Board of India (SEBI), மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகங்களுக்கான விதிமுறைகளும் வழிமுறைகளும் நல்ல Maturity பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் ஒரு சட்ட மீறல் நடக்கும் போது சட்டத்திற்கு உட்பட்டு நடந்தவர்களை காப்பாற்ற இந்த நடுநிலை நிறுவனங்களும் அரசாங்கமும் பல முயற்சிகள் எடுத்திருக்கின்றன.

அதாவது நீங்கள் State Bank of Indiaவில் பணம் போட்டு அது மூழ்கிப் போனால் உங்கள் பணத்திற்கு அராசங்கமே உத்திரவாதம் தருகிறது. அந்த வங்கியை வேறு ஒரு வங்கியுடன் இணைத்து மீண்டும் உயிர் பெற செய்யும்.

ஆனால் 20 சதவீத வட்டிக்கு ஆசைப்பட்டு உங்கள் தெருவோரத்தில் அரசாங்கம் அங்கீகரிக்காத ஒரு நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தால் நீங்கள் காவல்துறையிடம் தஞ்சம் அடையலாமே ஒழிய அரசாங்கம் ஒன்றும் செய்ய இயலாது. அதாவது காவலர் குற்றவாளிகளை பிடித்தால் அவர்களும் பணம் செலவு செய்யாமல் இருந்தால் ஒரு வேளை உங்கள் பணம் கிடைக்கலாம். ஏன். ஏனென்றால் அரசாங்கம் Investor Awareness முதலீடு செய்வர்களுக்கான விழிப்புணர்ச்சி திட்டங்களை மீறி அவர்கள் சொன்னதை கேட்காமல் கண்டவர்களின் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதால் அவர்கள் உங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை.

மேலும் அபரிமிதமான பேராசை எந்த தொழிலுக்குமே ஆபத்து தரும். அது பங்கு வர்த்தகத்திற்கும் தகும்.

மேலும் பேசுவோம்…..

No comments:

Post a Comment