Showing posts with label Investment. Show all posts
Showing posts with label Investment. Show all posts

Saturday, August 9, 2014

பணமும் பங்கு வர்த்தகமும் பிரச்சனையும்

அதெல்லாம் எனக்கு தெரியும். நேரா மேட்டருக்கு வா என்று சிலர் அவசரப்படுவது நியாயமே.

அது போன்றவர்களுக்கு நேரிடையாக சில விடயங்கள் சொல்கிறேன். பிறகு முன் பதிவின் இறுதியிலிருந்து தொடர்கிறேன்.

பாதுகாப்பாக பங்கு வர்த்தகம் பயிலும் வழி முறைகள்:

  • முதலில் http://moneybhai.moneycontrol.com எனும் தளத்தில் இலவசமாக ஒரு கணக்கை துவக்கவும்.

image

Courtesy: http://www.moneycontrol.com

  • இத்தளத்தில் பங்கு வணிக விளையாட்டு என்று ஒன்று உண்டு. உங்களுக்கு முதலில் ஒரு கோடி ரூபாய் தருகிறார்கள். ஹா ஹா மெய்யான பணம் இல்லை. இது இ-பணம்.
  • நீங்கள் நிஜமான சந்தைகளில் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.
  • ஒவ்வொரு நாளும் நீங்கள் வாங்கிய பங்குகளின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியை அறியலாம்.
  • இதனால் நீங்கள் சரியான பங்குகளை வாங்குகிறீர்களா என்பதையும் உங்கள் முடிவுகள் சரியானதாக இருக்கிறதா என்பதையும் குறித்துக் கொள்ளலாம்.
  • உங்கள் கடினமான உழைப்பில் சம்பாதித்த பணத்தை போட்டு பங்கு வர்த்தகம் பயில்வதை விட சில மாதங்கள் இந்த தளத்தில் விளையாடி பயிலவும்.

மேலும் பேசுவோம்….

பங்கு வர்த்தகத்தில் செல்வந்தராகலாமா

 

என்னடா இது பங்கு வர்த்தகம் பயில வந்த இடத்தில் என் வீட்டுக் கணக்கை கேட்கிறானே என்று எண்ண வேண்டாம்.

பெரும்பாலும் நான் பேசியவர்களிடம் அறிந்தது என்னவென்றால் என்ன ஐயா வீட்டு செலவிற்கே வருமானம் போதவில்லை நீங்கள் பங்கு வர்த்தகம் பண்ணு சேமிப்பு பண்ணு முதலீடு பண்ணு அப்படியெல்லாம் பேசறீங்க என்று சொன்னவர்களே அதிகம்.

அதனால் தான் இந்த முன்னேற்பாடு.

நீங்கள் தினமும் செய்யும் செலவுகளை குறிப்பெடுத்து வந்தால் மாத முடிவில் எது அவசிய செலவு எது அநாவசிய செலவு என்பதை விரைவில் அறிந்து விடுவீர்கள். அதை தவிர்த்தாலே அந்த மீதம் உள்ள பணத்தை என்ன செய்யலாம் என்பதை அறிவீர்கள்.

நாம் முதலீட்டை பற்றி பேசினோம் அல்லவா.

நமக்கு கூடுதல் வருமானம் வரத்தானே நாம் முதலீட்டை பற்றி பேசினோம். அவ்வாறான கூடுதல் வருமானம் எப்போது வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

  • நான் ஓய்வு பெற்ற பிறகு அமைதியாக வாழ ஒரு வீடு வேண்டும்
  • நான் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர வருமானம் வேண்டும்
  • என் மகளுக்கு இன்னும் 20 வருடத்தில் திருமணம் செய்ய வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
  • என் மகனை நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.
  • வாகனம் வாங்க வேண்டும். எத்தனை நாள் தான் பேருந்தில் செல்வது.

எத்தனை வேண்டும். எப்போது வேண்டும் என்பதை வைத்தே நமது சேமிப்பு முறைகளும் நிர்ணயமாகிறது.

நிலம்

  • குறுகிய கால முதலீட்டிற்கு உகந்தது அல்ல.
  • எத்தனை மடங்கு அந்த முதலீடு பெருகிறது என்பது நீங்கள் வாங்கிய இடத்தை பொறுத்தது.
  • நினைத்தவுடன் விற்க இயலாது
  • மாதாந்திர வருமானம் கிடைக்காது
  • நிலம் இருக்கும் இடத்தை பொறுத்து ஆக்கரமிப்பு பிரச்சனை, அரசியல் குறுக்கீடு, நிலம் அபகரிக்கும் முதலைகளிடம் சிக்குதல், வழக்கு என்று பிரச்சனைகள் இல்லாது இருக்க வேண்டும்
  • நிலம் வாங்க முதலீடு தேவை. பெருந்தொகை அல்லது வங்கிக் கடன். அதற்கு கட்ட வேண்டிய தவணைகள். அதற்கான வட்டி விகிதம். (EMIs and Interest Rates).

மேலும் பேசுவோம்….

முதலீட்டு வகைகள்


மேலும் அதைப் பற்றி பேசுவதற்கு முன் சில விடயங்கள் பேசுவது அவசியமாகிறது.
முதலீடு என்றாலே நம்மிடம் தேவைக்கு அதிகமாக சற்றே பணம் இருப்பதாக தானே பொருள் என்று நினைக்கலாம். அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின் வரும் பதிவகளில் அறிவீர்கள்.
பணம் இருப்பவன் தானே அதிகம் பணம் பண்ண முடியும் என்றும் நினைக்க வேண்டாம்.
இரண்டாவது மந்திரம்
உங்கள் வருமானத்திற்கும் உங்கள் செலவகுகளிற்கும் சரியாக குறிப்பேட்டில் பதிவு செய்துக் கொள்ளுங்கள். எந்த செலவு தண்டமாக போகிறது என்பதை அடிக்கடி பார்த்து அதை தவிர்த்து வாருங்கள். ஒரு நாளைக்கு 20 ரூபாய் எங்காவது நீங்கள் சேமிக்க முடிந்தால் அதை வைத்து நீங்கள் ஒரு கோடி ரூபாய் செய்யலாம். இதனை மறக்க வேண்டாம்.
எப்போது முதலீட்டை துவங்க வேண்டும்?
உங்கள் முதல் சம்பளத்திலிருந்தே முதலீட்டு சேமிப்பு இவற்றை துவங்க வேண்டும். அட நான் தான் திருமணமாகாதவனாயிற்றே சற்றே வாழ்கையை அனுபவித்து போகிறேன் என்று ஊதாரியாக செலவு செய்யும் எண்ணத்தை விட வேண்டும்.
இன்னிக்க செத்தா நாளைக்குப் பால். என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போவோம் இவ்வாறாக பேசுபவர்களை தவிர்க்கவும். கடைசியில் இடுகாட்டில் கூட செலவு இருக்கிறது என்பதை அறியாத வீணர்கள் இவர்கள்.
ஆக சேமிப்பையே நினைத்து இன்றைய வாழ்கை அனுபவிக்காமல் விட வேண்டுமா என்று கேட்டால் நான் இல்லை என்பேன். அதற்கு நீங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவது எது என்று பட்டியலிடுங்கள். நிரந்த மகிழ்ச்சி எது தற்காலிக மகிழ்ச்சி எது என்று வரையறை செய்யுங்கள். பிறகு நீங்களே உணர்வீர்கள்.
மாதாந்திர செலவுப் பட்டியல்:
  • வீட்டு வாடகை
  • மின்சாரம்
  • தண்ணீர்
  • மளிகை
  • பால் மற்றும் பழங்களை
  • காய் கறிகள்
  • எரிபொருள் (Petrol, Gas Cylinder, Kerosene)
  • வீட்டுத் தொலைப்பேசி
  • கைப்பேசி
  • பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம்
  • குடும்பத்துடன் சினிமா மற்றும் வெளியே சென்ற உணவு உண்டு ஆகும் செலவு
  • பணியாட்டகளின் சம்பளம்
  • தொலைகாட்சி மாதாந்திர கட்டணம்
  • இஸ்திரி செலவு
  • முடிவெட்டும் செலவு
  • உடற்பயிற்சி கூட கட்டணம்
  • இதர செலவுகள்
இது ஒரு மாதிரிப் பட்டியல் தான். இன்னும் ஏதாவது விடுப்பட்டிருந்தால் அதையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
மொத்த வருமானம் – 20,000 (எடுத்துக்காட்டாக)
மொத்த செவு – 18,000
மீதம் – 2,000
மேலும் பேசுவோம்…..