Sunday, July 18, 2021
Monday, July 13, 2015
Tuesday, February 17, 2015
Friday, February 13, 2015
Friday, February 6, 2015
Thursday, February 5, 2015
பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 1
இத்துடன் பயன்படுத்த வேண்டிய வலைப்பூ இணைப்புகள்
http://tamililvarthagam.blogspot.com
http://bharatstockmarket.blogspot.com
Sunday, August 24, 2014
NSE Nifty Fifty
http://www.nseindia.com/live_market/dynaContent/live_watch/equities_stock_watch.htm?cat=N
மேல் உள்ள தொடுப்பில் நீங்கள் Nifty குறியீட்டின் 50 நிறுவனங்களி தற்போதைய நிலவரத்தை காணலாம்.
முன்குறிப்பு – இந்த பதிவு இடப்பட்ட நாள் ஆகஸ்ட் 24 2014. அடுத்த மாதம் இந்த 50 நிறவனங்களின் பட்டியில் புதுப்பிக்கப்படுகிறது. அதாவது சில நிறுவனங்களை அகற்றி சில புதிய நிறவனங்கள் நுழைக்கப்படுகிறது.
இதோ தற்போதைய நிறவனங்களின் பட்டியல்
• ACC
• AMBUJACEM
• ASIANPAINT
• AXISBANK
• BAJAJ-AUTO
• BANKBARODA
• BHARTIARTL
• BHEL
• BPCL
• CAIRN
• CIPLA
• COALINDIA
• DLF
• DRREDDY
• GAIL
• GRASIM
• HCLTECH
• HDFC
• HDFCBANK
• HEROMOTOCO
• HINDALCO
• HINDUNILVR
• ICICIBANK
• IDFC
• INDUSINDBK
• INFY
• ITC
• JINDALSTEL
• KOTAKBANK
• LT
• LUPIN
• M&M
• MARUTI
• MCDOWELL-N
• NMDC
• NTPC
• ONGC
• PNB
• POWERGRID
• RELIANCE
• SBIN
• SSLT
• SUNPHARMA
• TATAMOTORS
• TATAPOWER
• TATASTEEL
• TCS
• TECHM
• ULTRACEMCO
• WIPRO
நீங்கள் பங்குச் சந்தையில் விளையாடி பயிலும்போது இந்த நிறவனங்களை வாங்கி கூர்ந்து அவற்றின் நடவடிக்கைகளை கவனிக்கலாம்.
மேலும் பேசுவோம்….
BSE SENSEX 30 Companies
இந்த பட்டியல் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டை தினமும் நிர்ணயிக்கும் முப்பது பங்குகளின் பட்டியலாகும்.
இந்த தொடுப்பில் காணலாம் http://www.bseindia.com/markets/Equity/newsensexstream.aspx
இந்த முப்பது நிறுவனங்களின் பங்கை மட்டும் தேர்ந்தெடுத்தது ஏன். எவ்வாறு இவற்றின் வியாபாரம் குறியீட்டு எண்ணை மேலே கீழே போகச் செய்கிறது என்பதை விரைவில் காண்போம்.
தற்போது நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது இந்த முப்பது பங்குகளின் அன்றைய வியாபாரத்தை ஓட்டியே குறியீட்டு எண் மாறுபடும்.
இது மட்டுமல்லாமல் இன்னும் பல குறியீட்டு எண்கள் உள்ளன. அவற்றையும் விரைவில் பார்ப்போம்.
முதலில் நீங்கள் பங்குச் சந்தையில் இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிப் பழகுங்கள்.
மேலும் பேசுவோம்…..
வாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம் - 3
முந்தைய பதிவில் கூறியிருந்ததைப் போல நீங்கள் Reliance நிறுவனத்தை தேர்ந்தெடுத்தீர்கள்.
உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இ-பணம் இருக்கிறது.
இதை நல்லப்படியாக பன்மடங்காக ஆக்க வேண்டும்.
சரி. இப்போது இந்த வாங்கும் பகுதியில் ஒரு எண்ணை இடுங்கள். நீங்கள் இப்போது பங்கு சந்தை பயிலும் மாணவரல்லவா கணக்கு அதிகம் பார்த்து நேரம் கிடத்த வேண்டாம். 1, 10, 100 அல்லது 1000 என்ற அளவில் பங்குகளை வாங்குங்கள். கணக்கிற்கு சுலபமாக இருக்கும்.
Current Price அல்லது Limit Price தேர்ந்தெடுங்கள். இப்போதைக்கு சந்தை விலையான Current Price தேர்ந்தெடுங்கள். மொத்த முதலீட்டு தொகை அதுவாகவே கண்க்கிட்டுக்கொள்ளும். உங்கள் வாங்கும் கட்டளை எது வரையில் காலாவதியாகாமல் இருக்க வேண்டும் என்பதை தேரந்தெடுங்கள். GTD யில் விட்டு விடுங்கள்.
Stop loss பற்றி பிறகு பேசுவோம். முதலில் சிலவற்றை வாங்கி விற்று பயில்வோம்.
என்ன பங்குகளை வாங்க வேண்டும்…..
மேலும் பேசுவோம்…
வாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்–2
முதலில் சில பங்கு சந்தை கலைச்சொற்களின் பொருளை அறிவோம். இது குறிப்பாக ரொக்க சந்தையில் நாம் பங்குகளை வியாபாரம் செய்யும் போது அறிய வேண்டிய சொற்கள். ரொக்க சந்தை என்றால் Cash Market அதாவது வியாபாரம் தொடங்கும் முன் தேவையான பணம் உங்கள் வங்கி கணக்குகளில் இருக்க வேண்டும். வாங்குவதற்கு தேவையான ஒரு பகுதி பணம் மாத்திரம் வைத்துக் கொண்டும் பங்கு வியாபாரம் செய்யலாம் அது என்ன என்று பிறகு பார்க்கலாம்.
Brokerage – தரகர் கட்டணம்
உங்களிடமிருந்து வசூலிக்கப்படும் தரகர் கட்டணம். இது 0.50 சதவீதத்தலிருந்து 2.5 வரை இருக்கலாம். நீங்கள் ICICI Directன் மூலம் Demat கணக்கு வைத்திருந்தால் நீங்கள் பங்குகளை வாங்கும் போது விற்கும்போது இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
GTC Order – Good Till Cancelled
இம்முறையில் நீங்கள் வாங்குவதற்காக இருந்த பங்கு நீங்களாகவே நிறத்தும் வரையில் தானாக நிறத்தாது. அதாவது Online Stock Trading என்பது இணையம் மூலமாக தாமாக இயங்கும் ஒரு மென்பொருளாகும். அதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விலையில் ஒரு குறிப்பிட்ட பங்கை வாங்குமாறு கட்டளை இடுகிறீர்கள். அந்த விலையில் பங்குகள் கிடைக்கும் வரையில் இந்த மென்பொருள் முயன்றுக் கொண்டே இருக்கும்.
GTD Order – Good Till Day
மேல் சொன்னதற்கு மாறாக சந்தை நாளிலேயே நீங்கள் இட்ட கட்டளை காலாவதியாகிவிடும். மீண்டும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு கட்டளையிட வேண்டும்.
Limit Order
வாங்கும் போது அதிக பட்ச விலையும் விற்கும்போது நீங்கள் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச விலையிலும் வியாபாரம் செய்ய விரும்புவதையே குறிக்கிறது. சந்தையின் விலை நமக்கு சாதமாக கூட இருக்கலாம்.
Market Order
சந்தையின் தற்போதைய விலைப்படி பங்குகளை வாங்குவதோ அல்லது விற்பதோ இது குறிக்கிறது.
Stop Loss
உங்கள் நட்டத்தை கட்டுப்படுத்த உதவும் ஒரு சாதனம். நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு அதிக விலையில் வாங்காமலும் நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு குறைந்த விலையில் விற்காமலும் இருக்க நீங்கள் இந்த அம்சத்தை உபயோகிக்கலாம்.
STT – Securities Transaction Tax
பங்குகளை வாங்கும் விற்கும் முதலீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஒரு வரி. சதவீதம் 0.125.
Target Price
ஒரு பங்கை வாங்கிவிட்டு நீங்கள் சில சதவீத லாபத்துடன் விற்க நினைப்பீர்கள் அல்லவா. அவ்வாறாக நீங்கள் எதிர்பார்க்கும் இல்க்க விலை தான் இது.
மேலும் பேசுவோம்.
Monday, August 11, 2014
வாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்
முதலில் பங்குகளை எப்படி வாங்குவது என்பதை பற்றி பார்ப்போம்.
முன்பு சொன்னது போல moneycontrol தளத்தில் ஒரு கணக்கை துவக்கி விட்டீர்கள்.
பிறகு நீங்கள் ஒரு Portfolio வை உருவாக்க வேண்டும். இது நீங்கள் பங்குகளை வைத்திருக்கும் ஒரு கோப்பு என்று கொள்ளுங்கள். இதற்கு ஒரு பெயரை கொடுங்கள்.
கீழே படத்தில் காட்டியுள்ளது போல Transact எனும் தொடுப்பை தட்டுங்கள்.
பிறகு பங்குகளை வாங்குவதற்கான பகுதி திறக்கும். நான் முதல் சில எழுத்துக்களை எழுதி Reliance எனும் நிறுவனத்தின் பங்குகளை தேடுகிறேன்.
இது பல Scrips களை பட்டியலிடும். அதாவது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட பல பங்குகளின் பெயர்களை பட்டியலிடும்.
இதில் நாம் எந்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவோம் என்று பார்க்கலாம். ஒன்றும் பயம் வேண்டாம். இ-பணம் தானே. தைரியமாக வாங்குவோம். ஒரு கோடி ரூபாய் இருக்கிறதே.
பிறகு ரிலையன்ஸ் எனும் Scrip ஐ தேர்தெடுத்து எத்தனை வேண்டும் என்று இட்டு Buy எனும் பொத்தானை அமுக்கவும்.
பங்குகளை தேடும் முறை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கை தேர்ந்தேடுத்தேன்
இந்த வாங்கும் பக்கத்தில் உள்ளை என்னென்ன என்று அறியலாம்.
1. முதலில் இடது மேல் புறத்தில் நாம் காண்பது அந்த பங்கின் பெயரும், அதன் தற்போதைய விலையும் அது எத்தனை புள்ளிகள் நேற்றிலிருந்து இன்றைக்கு மாறியிருக்கறது, எத்தனை சதவீதம் ஏற்றம் அல்லது இறக்கம் மற்றும் எத்தனை பங்குகளை வியாபரத்தில் உள்ளன என்பதை காட்டும்.
2. வலது புறத்தில் Drop-down Menu ஒன்று கிடைக்கும். அதில் Cash அல்லது intra-day என்று இரண்டு உண்டு. முதலாவது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்திலிருந்து வாங்கவது. இந்த விளையாட்டில் உங்களிடம் ஒரு கோடி உள்ளது.
மேலும் பேசுவோம்…
Saturday, August 9, 2014
பங்கு வர்த்தகம் ஏமாற்று வேலையா?
இருக்கலாம். இதை வெளியாளாக இருந்துக் கொண்டு சொல்வது மிகவும் கடினம்.
- நாம் அறிந்த எத்தனையோ பெரிய நிறுவனங்கள் மூழ்கிப் போயிருக்கின்றன.
- பல முறை கையாடல்கள் உள்குத்து பெரிய தலைகள் மாட்டிக் கொள்வது என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைப்பு செய்திகள் வருகிறது.
- நமக்கு தெரிந்த நிறுவனங்களிலேயே கணக்கு புத்தகங்களை படித்த CA க்கள் மாற்றி அமைக்கிறார்கள். லாப நட்டங்களை திரித்துக் காட்டுகிறார்கள். இறந்துக் கொண்டிருக்கும் நிறவனங்களை கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களாக காட்டுகிறார்கள்.
- சில பெரிய நிறுவனங்கள் Public Relations Officer – PRO அமர்த்தி இணையத்திலும் செய்தி தாட்களிலும் தொலைகாட்சிகளிலும் அவர்களின் பங்குகளை வாங்கினால் நல்ல விலையில் விற்று லாபம் பெறலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
- பணக்காரர்கள் ஏற்படுத்திய இந்த உலகக்தில் நடுத்தர வர்க்கத்திற்கும் ஏழைகளுக்கு எங்கே இடம் என்றும் தோன்றுகிறது.
- பங்கு வர்த்தகத்தில் லாபம் அடைந்தவர்கள் காண்பதே அரிதாக இருக்கிறது.
- பெரிய நிறுவனங்கள் பல கோடி ரூபாயில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறைய Demand இருப்பதாக ஒரு போலி தோற்றத்தை உருவாக்குகிறார்கள். பிறகு பங்கின் விலை உயரத்துவங்கியதும் அவர்களே விற்று Supply லாபம் சம்பாதிக்கிறார்கள்.
- தனி மனித கோடிஸ்வரர்களும் இவ்வாறாக நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் அடிப்பதும் நடக்கிறது.
- பல இடைத்தரகர்கள் தற்கொலை செய்துக் கொண்டதையும் நாம் அறிந்திருக்கிறோம் செய்திகள் மூலமாக.
ஐயோ ஏமாற்று வேலையாக இருக்கலாமா? என்னங்க சொல்றீங்க அப்ப இந்த வலைப்பூவை படிப்பதே வேஸ்ட் என்று நீங்கள் நினைப்பது சகஜமே.
சில விளக்கங்கள்
சட்டங்கள் வரையறுக்கப்படுவது அதை சாமார்த்தியமான சிலர் மீறுவது நடந்துக் கொண்டிருக்கின்றன. அதனால் வாழ்கை சக்கரம் ஓய்வதில்லை.
விமானம் கடத்தப்படுகிறது என்று யாரும் விமானப் பிரயாணம் செய்யாமல் இருப்பதில்லை.
உணவில் கலப்படம் நடக்கிறது என்பதால் உணவகங்களுக்கு மக்கள் போகாமல் இல்லை.
உடலில் தங்கங்களை போதை மருந்தை பதுக்கி வைத்து சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிலிருந்து வந்து மாட்டிக் கொள்பவர்களின் கதைகளையும் கேட்கிறோம்.
இந்தியாவில் பெரிய ஊழல் வாதிகளையும் ஊழல் அரசாங்கங்களையும் மீறி இந்தியாவின் பொருளாதாரமும் வங்கித்துறையும் பங்கு வர்த்தகமும் அதற்கான சட்டதிட்டங்களும் மிகவும் கடினமாகவும் பொதுமக்களை பாதுகாப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது.
இந்தியாவின் Reserve Bank of India (RBI), Securities and Exchange Board of India (SEBI), மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகங்களுக்கான விதிமுறைகளும் வழிமுறைகளும் நல்ல Maturity பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் ஒரு சட்ட மீறல் நடக்கும் போது சட்டத்திற்கு உட்பட்டு நடந்தவர்களை காப்பாற்ற இந்த நடுநிலை நிறுவனங்களும் அரசாங்கமும் பல முயற்சிகள் எடுத்திருக்கின்றன.
அதாவது நீங்கள் State Bank of Indiaவில் பணம் போட்டு அது மூழ்கிப் போனால் உங்கள் பணத்திற்கு அராசங்கமே உத்திரவாதம் தருகிறது. அந்த வங்கியை வேறு ஒரு வங்கியுடன் இணைத்து மீண்டும் உயிர் பெற செய்யும்.
ஆனால் 20 சதவீத வட்டிக்கு ஆசைப்பட்டு உங்கள் தெருவோரத்தில் அரசாங்கம் அங்கீகரிக்காத ஒரு நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தால் நீங்கள் காவல்துறையிடம் தஞ்சம் அடையலாமே ஒழிய அரசாங்கம் ஒன்றும் செய்ய இயலாது. அதாவது காவலர் குற்றவாளிகளை பிடித்தால் அவர்களும் பணம் செலவு செய்யாமல் இருந்தால் ஒரு வேளை உங்கள் பணம் கிடைக்கலாம். ஏன். ஏனென்றால் அரசாங்கம் Investor Awareness முதலீடு செய்வர்களுக்கான விழிப்புணர்ச்சி திட்டங்களை மீறி அவர்கள் சொன்னதை கேட்காமல் கண்டவர்களின் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதால் அவர்கள் உங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை.
மேலும் அபரிமிதமான பேராசை எந்த தொழிலுக்குமே ஆபத்து தரும். அது பங்கு வர்த்தகத்திற்கும் தகும்.
மேலும் பேசுவோம்…..
நல்ல செய்தி நாணயத்தின் ஒரு பக்கம்
சரி. சென்ற பதிவில் பார்த்த பங்கு 7-8 மடங்கு உயர்ந்ததாக நினைத்து நாம் இந்த பங்கில் பணம் போட்ட சாமார்த்தியத்தை நினைத்து நம்மையே மெச்சிக் கொண்டோம்.
அதே படத்தை இன்னொரு முறை பாருங்கள்.
நீங்கள் நவம்பர் 2009த்தில் வாங்கியிருந்தால் சுமார் 80 ரூபாயக்கு வாங்கியிருப்பீர்கள். ஆனால் பிப்ரவரி 2013ல் அது 40 ரூபாய்க்கு விழுந்து விட்டது.
அடப்பாவி நன்றாக ஏறிக் கொண்டிருந்த பங்காயிற்றே. அட இதென்ன சோதனை என்று நினைப்போம்.
பொறுத்தவர்கள் 173 ரூபாய்க்கு விற்று பூமி ஆண்டுவிட்டார்கள். பொறுமையில்லாதவர்கள் 50 சதவீதம் நட்டத்தில் விற்றுவிட்டு அழுதுக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்கை ஒரு சக்கரம். மேலே சென்றது கீழே வரவேண்டும். ஏறுவது இறங்கும். இறங்குவது ஏறும்.
ஒரு முறை நீங்கள் நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கிவிட்டால் நீங்கள் நிர்ணயத்திருந்த அல்லது எதிர்பார்த்திருந்த லாபம் வரும் வரையில் விற்க வேண்டிய கட்டாய நிலைக்கு வராதீர்கள்.
முன்பு சொன்னது போல தொலைநோக்கு பார்வையுடன் காய்களை நகற்ற வேண்டும்.
அதற்கு பங்கு வர்த்தகத்தின் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வாழ்கையின் ஆதாரமாக தினசரி வாழ்கைக்காக வரும் வருமானமாக கொள்ளக் கூடாது.
மேலும் விபரமாக கூறுகிறேன்.
உங்கள் வாழ்கையின் தேவைகளை Essential, Desirable and Luxury என்று மூன்று வகையாக பிரித்துக் கொள்ளுங்கள்.
- இன்றைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வது Essential
- இருக்கும் நிலையிலிருந்து சற்ற வசதியாக இருப்பது Desirable
- முற்றிலும் வசதியாக படோடோபமாக வாழ வேண்டுவது Luxury
எடுத்துக் காட்டாக நீங்கள் உங்கள் மனைவி உங்கள் ஒரு மகள் மூவரும் தான் உங்கள் குடும்பம் என்றால் 1-Bed Roomல் வாழ்கை நடத்தலாம். வீட்டில் விருந்தினர் தங்குவது போல் வந்தால் கடினம் தான். ஹாலில் யாராவது படுக்க வேண்டியிருக்கும். அது நாமா அல்லது வந்தவரா என்பதிலும் குழப்பம் வரும்.
2-bed roomல் இருப்பது Desirable. வந்தவர்கள் தங்கலாம். மற்ற நாட்களில் இன்னொரு படுக்கையறை குழந்தையின் அறையாக விளையாட்டு பொருட்களுடன் அலங்கரிக்கலாம்.
3-bed room கிடைத்தால் பலே ஜோராக இருக்கலாம்.
இப்போது நீங்கள் உங்களுடைய முதல் வீட்டையே பங்கு வர்த்தகத்தின் வருமானத்தில் வாங்க நினைப்பது ஆபத்து. உங்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் வீடு வாங்க வேண்டும் நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் நல்ல நிலையில் இருக்கிறது இன்னும் சிறிது ஏறினால் விற்றுவிட தயாராக இருக்கிறீர்கள் ஆனால் திடீரென்று சந்தை சரிகிறது. உங்கள் கனவுகளை சேர்த்து கொண்டு தான்.
இது உங்களுக்கு பேரிடியாக இருக்கும். இப்போது என்ன செய்வீர்கள் வீட்டிற்கு முன்பணம் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது, கையில் இருக்கும் பங்குகளை விற்று மேலும் கடன் வாங்கி வீட்டுக் கடன் வாங்கி ஏதோ செய்து வீடு வாங்கிவிடுவீர்கள். 15 வருடம் தவணை கட்ட வேண்டும். ஆனால் இந்த வீடு வாங்கும் நிலையை இன்னும் நான்கு வருடங்கள் தள்ளி வைக்க வாய்ப்பிருந்திருந்தால், விழுந்து போன நல்ல பங்குகளை அடிமாட்டு விலையில் நீங்கள் மேலும் வாங்கிக் குவித்திருந்தால் நான்கு வருடதிற்கு பிறகு நீங்கள் ஏற்கனவே வாங்கியிருந்த பங்குகளும் அடிமாட்டு விலைக்கு வாங்கிய பங்குகளும் சேர்ந்து மளமளவென்று ஏறும் போது ஆஹா இப்போது எந்த கடனும் இல்லாமலே வீடு வாங்கி விடலாமே என்ற நிலைக்கு வரும்.
இரண்டு பெரிய கேள்விகள்
- எப்போது வாங்க வேண்டும்?
- எப்போது விற்க வேண்டும்?
மேலும் பேசுவோம்…..
TVS Motor நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி
முதலில் ஒரு பங்கின் விலை. CMP என்றால் தற்போதைய விலை Current Market Price.
TVS Motoro Companyயின் 5-வருட Chart – விளக்கப்படம் இங்கு தரப்பட்டுள்ளது. August 2009ல் சுமார் ரூ 22 இருந்த ஒரு பங்கின் விலை நடப்பு ஆண்டில் August 2014ல் 173 ஆக வளர்ச்சி அடைந்து உள்ளது. அதாவது சுமார் 7 மடங்கு. இந்த வளர்ச்சி உங்களுக்கு வேறு எந்த முதலீட்டிலிருந்தும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா.
பொதுவாக 52-week LOW/HIGH என்று பார்க்கலாம். அதாவது ஒரு வருடத்தில் அந்த பங்கின் உச்சக் கட்ட விலையும் குறைந்த பட்ச விலையும்.
மேலும் வர்த்தகம் நடக்கும் நாளில் Open/Close அதாவது எந்த விலையில் துவங்கியது எந்த விலையில் முடிந்தது என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் பேசுவோம்…..